Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அப்ரோச்சே சரியில்லையே... சிபி சக்கரவர்த்தி படத்தை ரிஜெக்ட் செய்தாரா ரஜினி?

அப்ரோச்சே சரியில்லையே... சிபி சக்கரவர்த்தி படத்தை ரிஜெக்ட் செய்தாரா ரஜினி?

By: Nagaraj Thu, 22 Dec 2022 10:22:18 AM

அப்ரோச்சே சரியில்லையே... சிபி சக்கரவர்த்தி படத்தை ரிஜெக்ட் செய்தாரா ரஜினி?

சென்னை: பிடிக்கலையாம்... ரிஜெக்ட் செய்தார்... ரஜினி தற்போது ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் டான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கவனிக்கப்படும் இயக்குனராகியுள்ளார் சிபி சக்ரவர்த்தி. சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்த டான் திரைப்படம் கடந்த மே 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

100 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இப்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இன்னும் அந்த படம் அறிவிக்கப்படவில்லை. அதற்கு முன்பாக ஐஸ்வர்யா ரஜினி, இயக்கும் லால் சலாம் படத்தில் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

reject,salary,much,rajini,movie,cb chakraborty ,ரிஜெக்ட், சம்பளம், அதிகம், ரஜினி, படம், சிபி சக்ரவர்த்தி

இந்நிலையில் சிபி சக்ரவர்த்தியின் படத்துக்கான வேலைகள் நடந்து வந்த நிலையில் அந்த கதையில் திருப்தி இல்லாத ரஜினி அந்த கதையை வேண்டாம் என சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ரஜினியின் அடுத்த பட இயக்குனர் இப்போதைக்கு முடிவு செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரஜினி வேண்டாம் என சொன்னதற்கான காரணம் என்ன என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் சிபி சக்ரவர்த்தியின் அனுகுமுறை ரஜினிக்கு பிடிக்கவில்லையாம். இதனால் ரஜினி லைகாவிடம் இந்த படம் வேண்டாம் என சொல்லிவிட்டாராம். மேலும் படத்துக்காக சிபி சக்ர்வர்த்தி கேட்ட சம்பளமும் அதிகம் என்பதால் லைகாவும் கையை விரித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

Tags :
|
|
|
|
|