- வீடு›
- பொழுதுபோக்கு›
- ஜவான் படத்தின் ஆடியோ உரிமை ரூ.36 கோடிக்கு விற்பனை ஆனது
ஜவான் படத்தின் ஆடியோ உரிமை ரூ.36 கோடிக்கு விற்பனை ஆனது
By: Nagaraj Mon, 03 July 2023 00:24:43 AM
மும்பை: ஜவான் படத்தின் ஆடியோ உரிமை ரூ.36 கோடிக்கு விற்பனை ஆகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அட்லீ இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ஜவான். அதில் ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, சஞ்சய் தத், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஹிந்தி சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் இந்த படத்திற்காக அதிகம் காத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.
அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இதன் ஆடியோ ரைட்ஸ் உரிமையை டி சீரிஸ் நிறுவனம் மிக பிரம்மாண்ட தொகைக்கு வாங்கி இருக்கிறதாம்.
36 கோடி ரூபாய்க்கு ஆடியோ ரைட்ஸ் வியாபாரம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்போதே இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags :
jawan |
anirudh |
music |