Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சாயிஷாவையே உரித்து பிறந்துள்ள குழந்தை... இன்ஸ்டாவில் புகைப்படம் பதிவிட்டார்

சாயிஷாவையே உரித்து பிறந்துள்ள குழந்தை... இன்ஸ்டாவில் புகைப்படம் பதிவிட்டார்

By: Nagaraj Sun, 08 Jan 2023 5:59:16 PM

சாயிஷாவையே உரித்து பிறந்துள்ள குழந்தை... இன்ஸ்டாவில் புகைப்படம் பதிவிட்டார்

சென்னை: அப்படியே அம்மா சாயிஷாவை உரித்து பிறந்துள்ளது குழந்தை என்று கோலிவுட்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் நடிகர் ஆர்யா- சாயிஷா. கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சயீஷா நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் உருவானது.

இதன் பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் ஹைதராபாதில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதியருக்கு ஆரியனா என ஒரு மகள் இருக்கிறார்.

actor arya,sayisha,baby,comment,instagram ,நடிகர் ஆர்யா, சாயிஷா, குழந்தை, கருத்து, இன்ஸ்டாகிராம்

சாயிஷா திரைப்படங்களில் நடிப்பதில்லை என்றாலும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சமீபத்தில் இவர் குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது. அதில் ஆரியனா பார்க்க சாயிஷா போல இருக்கிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :
|