- வீடு›
- பொழுதுபோக்கு›
- சூரரை போற்று படத்தை OTTயில் விற்பனை செய்ய படக்குழு முடிவு; அதிர்ச்சியில் ரசிகர்கள்
சூரரை போற்று படத்தை OTTயில் விற்பனை செய்ய படக்குழு முடிவு; அதிர்ச்சியில் ரசிகர்கள்
By: Nagaraj Mon, 18 May 2020 12:52:42 PM
பிரமாண்ட படமாக உருவாகியுள்ள சூர்யாவின் சூரரை போற்று தியேட்டர்களில் வெளியாகாது என்ற தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். இவரது நடிப்பில் மிகவும் பிரமாண்ட படமாக சூரரைப் போற்று எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா பிரச்னையால் தள்ளிப் போனது. இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும்... எப்போது பார்ப்போம் என்று ரசிகர்கள் வெகு ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்போது அவர்களுக்கு தலையில் இடி விழுந்தது போல் ஒரு விஷயம் உலா வந்து கொண்டிருக்கிறது.
இப்படத்தை OTTயில் பெரிய தொகை கொடுத்து விற்க படக்குழு முடிவு செய்து விட்டதாம். இதனால் திரையரங்குகளில் படம் ரிலீஸ் இல்லை என்ற தகவல்தான் அது. இதனால் சூர்யா ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் சில நாட்களில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தாலும் வரும் என்று தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே சூர்யா தன் மனைவி ஜோதிகாவின் படத்தை OTTயில் ரிலீஸ் செய்ய போவதாக தெரிவித்த நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் சூர்யாவின் படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்றும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் சூரரை போற்று படத்தை OTTயில் விற்க உள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சி தகவல்கள்தான். இப்படி உலா வரும் தகவல்களுக்கு இதுவரை சூர்யாவின் தரப்பில் இருந்து மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.