Advertisement

அவருடன் நடிக்க வாய்ப்பு கொடுத்ததே மிகப்பெரிய பரிசு

By: Nagaraj Fri, 17 June 2022 10:40:02 PM

அவருடன் நடிக்க வாய்ப்பு கொடுத்ததே மிகப்பெரிய பரிசு

சென்னை: ரசிகரின் கேள்விக்கு அவருடன் நடிக்க வாய்ப்பு தந்ததே பெரிய பரிசு தான். எவ்வளவு பெரிய விஷயம்ங்க இது, நான் வாழ்நாளில் கற்பனை கூட செய்திராத விஷயம் என்று நச் பதில் கொடுத்துள்ளார் நடிகர் விஜய்சேதுபதி.
கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் விக்ரம், பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான விக்ரம் திரைப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது.
அதன்படி தமிழகத்தில் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ள விக்ரம் திரைப்படம், விரைவில் பாகுபலி பட வசூலையும் முந்தி தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இப்படம் இருக்கும் சொல்லப்படுகிறது.

vijay sethupathi,answer,character,actor kamal,man,prize ,விஜய்சேதுபதி, பதில், தன்மை, நடிகர் கமல், மாமனிதன், பரிசு

மேலும் உலகளவில் இப்படம் ரூ.320+ கோடிக்கும் மேல் வசூலை குவித்து தென்னிந்திய திரைப்படங்களில் அதிக வசூலை செய்த படங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது விக்ரம். இந்நிலையில் விக்ரம் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியால் நடிகர் கமல் இயக்குநர், உதவி இயக்குநர், சூர்யா உள்ளிட்டோருக்கு பரிசுகளை அளித்து வந்தார் இது பெரியளவில் பேசப்பட்டு வந்தன.

இதற்கிடையே மாமனிதன் படத்திற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஜய் சேதுபதியிடம் கமல் உங்களுக்கு எந்த ஒரு பரிசையும் அளிக்கவில்லையே என கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்துள்ள விஜய் சேதுபதி “அவருடன் நடிக்க வாய்ப்பு தந்ததே பெரிய பரிசு தான். எவ்வளவு பெரிய விஷயம்ங்க இது, நான் வாழ்நாளில் கற்பனை கூட செய்திராத விஷயம். இப்படியெல்லாம் நடக்கும் என யோசித்து கூட பார்தததில்லை” என தன்மையாக பதிலளித்துள்ளார்.

Tags :
|
|