- வீடு›
- பொழுதுபோக்கு›
- இன்னும் தொடரும் வசூல் வேட்டை... ஜெயிலர் படக்குழு மகிழ்ச்சி
இன்னும் தொடரும் வசூல் வேட்டை... ஜெயிலர் படக்குழு மகிழ்ச்சி
By: Nagaraj Wed, 30 Aug 2023 07:17:00 AM
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் வேட்டை இன்னும் தொடர்ந்து கொண்டே இருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் மாஸ் வரவேற்பை பெற்றுள்ளது.
அனிருத் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் நல்ல ஹிட். தமன்னா, மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ரூ. 525 கோடிக்கு மேல் படம் இதுவரை வசூலித்துள்ளது என கடந்த வாரம் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
ஜெயிலர் திரைப்படம் ரூ. 200 கோடி முதல் ரூ. 240 கோடி பட்ஜெட்டில் தயாரானதாம். படமும் 19 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 575 கோடி வரையும், தமிழகத்தில் ரூ. 180 கோடி வரையும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் வசூல் வேட்டை தொடர்வதால் படக்குழுவினர் ஏக மகிழ்ச்சியில் உள்ளனர்.