Advertisement

சித்தார்த் நடித்து சித்தா படத்தின் வசூல் நாளுக்கு நாள் உயர்கிறது

By: Nagaraj Wed, 04 Oct 2023 11:51:16 AM

சித்தார்த் நடித்து சித்தா படத்தின் வசூல் நாளுக்கு நாள் உயர்கிறது

சென்னை: நாளுக்கு நாள் நடிகர் சித்தார்த் நடித்துள்ள சித்தா படத்தின் வசூல் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

எப்போதுமே தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் சித்தார்த். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் சித்தா. இது சித்தார்த்துக்கு தமிழ் சினிமாவில் கிடைத்துள்ள சிறப்பான கம் பேக் என ரசிகர்களால் கூறப்படுகிறது.

இப்படத்தை அருண் குமார் என்பவர் இயக்கி இருந்தார். மக்களுக்கு கண்டிப்பாக போய் சேரவேண்டும் என்ற கருத்தை ஆணித்தனமாக இப்படத்தில் கூறியுள்ளனர்.

siddharth film to increase collections,rs 3.5 crores,information,siddharth ,சித்தா படம், வசூல் அதிகரிக்கும், ரூ.3.5 கோடி, தகவல், சித்தார்த்

முதல் நாளில் இருந்தே சித்தா படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதன்பின் திரையரங்கங்களும் இப்படத்திற்கு கூடுதலாக கிடைக்க துவங்கியது. அன்று முதல் அடுத்தடுத்த நாட்களில் இப்படத்தின் வசூல் அதிகரிக்க துவங்கிய நிலையில் இதுவரை ரூ. 11.5 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளது.

அதே போல் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ. 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களிலும் கண்டிப்பாக சித்தா படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Tags :