Advertisement

வாரிசு படத்தின் ஆடியோ உரிமத்தை கைப்பற்றிய நிறுவனம்

By: Nagaraj Tue, 01 Nov 2022 11:15:13 AM

வாரிசு படத்தின் ஆடியோ உரிமத்தை கைப்பற்றிய நிறுவனம்

சென்னை: வாரிசு திரைப்படத்தின் ஆடியோ உரிமம் குறித்த அப்டேட்டுகள் வெளிவந்துள்ளது. டீ சீரிஸ் நிறுவனம் இந்த உரிமையை பெற்றுள்ளதாம்.

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, வாரிசு திரைப்படத்தைச் சார்ந்த அப்டேட்டுகள் அவ்வபோது வருமென ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், பட வெளியீட்டைத் தவிர்த்து படக்குழு பெரியளவில் அப்டேட்டுகளை எதையும் ரசிகர்களுக்கு தரவில்லை. இருப்பினும், வாரிசு திரைப்படத்தை தமிழகத்தில் 7ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிடவுள்ளதாக அப்டேட் வந்தது. இதனால் ரசிகர்கள் குஷியடைந்தனர்.

varisu movie,update,fans,sarathkumar,vijay,nakshatram ,வாரிசு படம், அப்டேட், ரசிகர்கள், சரத்குமார், விஜய், நட்சத்திரம்

இதைத்தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் வாரிசு திரைப்படத்தின் அப்டேட்டுகளை தொடர்ந்து கேட்ட வண்ணம் உள்ளனர். இதற்கு, பொங்கலுக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கும் மேல் உள்ளதால், கொஞ்சம் கொஞ்சமாக அப்டேட்டுகளை தரலாம் என படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.


இந்நிலையில், தற்போது வாரிசு திரைப்படத்தின் பாடல்கள் குறித்த அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. அதன்படி, முன்னணி நிறுவனமான ‘டீ-சீரிஸ்’ வாரிசு திரைப்படத்தின் ஆடியோ உரிமையை பெற்றுள்ளது. தமன் இசையில் உருவாகியிருக்கும் வாரிசு பட பாடல்களுக்கு அதீத எதிர்பார்ப்பு உள்ளது.


முன்னதாக, வாரிசு திரைப்படத்தின் இயக்குநர் வம்சி, தமனின் பாடல்கள் குறித்து புகழ்ந்து பேசினார். மேலும், தமன் விஜய் ரசிகர் என்பதால் அவருடைய முழு உழைப்பையும் செலுத்தி பாடல்கள் உருவாக்கியுள்ளார் என்றும் தெரிவித்தார்.


வாரிசு திரைப்படத்தில், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷியாம், சரத்குமார், சம்யுக்தா, குஷ்பு, யோகிபாபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறது. மேலும், விஜய்க்கு ஜோடியாக இத்திரைப்படத்தில் ராஷ்மிக மந்தனா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|