Advertisement

கருமேகங்கள் கலைகின்றன... தங்கர் பச்சான் படத்தின் பெயர் இதுதான்!!!

By: Nagaraj Thu, 28 July 2022 7:45:51 PM

கருமேகங்கள் கலைகின்றன... தங்கர் பச்சான் படத்தின் பெயர் இதுதான்!!!

சென்னை: தங்கர் பச்சான் இயக்கும் படத்திற்கு "கருமேகங்கள் கலைகின்றன" என பெயரிட்டுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் தங்கர்பச்சான் படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் வெகு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த படத்தில் முதன்மை வேடத்தில் யோகி பாபு, மம்தா மோகன்தாஸ் நடிக்கின்றனர். இவர்களுடன் பாரதிராஜா, கவுதம் மேனனன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை, ராமேஸ்வரம் போன்ற ஊர்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட பாத்திரங்களில் திரைப்படத்தின் அனைத்து நடிகர்களும் பங்கேற்கிறார்கள்.

director,thangarbachan,movie,yogi babu,lead character ,இயக்குனர், தங்கர்பச்சான், திரைப்படம், யோகி பாபு, முதன்மை கதாபாத்திரம்

முந்தைய திரைப்படங்கள் போலவே இத்திரைப்படமும் தங்கர் பச்சானின் சிறுகதையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. சிறிதும் சமரசம் செய்து கொள்ளாத தனது பாணியிலான வெகு இயல்பான வாழ்வியல் கொண்ட படமாக இது இருக்கும் என தங்கர்பச்சான் தெரிவித்தார். கண்மணி எனும் கதைப் பாத்திரத்திற்காக இந்தியாவிலுள்ள பல நடிகைகளிடம் நடிப்புத் தேர்வு நடத்திய பின் மம்தா மோகன்தாஸ் தேர்வாகி இருக்கிறார்.

இத்திரைப்படத்தின் மையமான பாத்திரத்தில் தான் நடிப்பதைப் பெருமையாக கருதுவதாக மம்தா மோகன்தாஸ் கூறுகிறார். மேலும் எஸ்.ஏ. சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார் போன்றோர் நடிக்கிறார்கள்

Tags :
|