- வீடு›
- பொழுதுபோக்கு›
- கலக்கல் அழகியாக ரோஜாவின் மகள்; வியப்பில் ரசிகர்கள்
கலக்கல் அழகியாக ரோஜாவின் மகள்; வியப்பில் ரசிகர்கள்
By: Nagaraj Mon, 18 May 2020 8:20:36 PM
அழகு... எவ்வளவு அழகு என்று ரோஜாவின் மகள் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
செம்பருத்தி படத்தில் அறிமுகம் ஆனவர் ரோஜா. இந்த படத்திற்கு பின்னர் ரஜினி, பிரபுதேவா, சரத்குமார் என்று முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார் நடிகை ரோஜா .
அடுத்து தெலுங்கு திரையுலகம் இவருக்கு ரெட்கார்பெட் விரித்தது. அங்கு சென்றவர் ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். பிறகு இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்துகொண்டு சென்னையில் வாழ்ந்தார்.
இந்நிலையில் ஆந்திரா அரசியலில் களம் கண்டு எம்எல்ஏ ஆகி உள்ளார். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவர் புகைப்படங்கள் வெளியாகும். தற்போது ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகாவின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வியப்படைய செய்துள்ளது. ரோஜாவின் மகள் செம கியூட்டாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.