Advertisement

வாத்தி படத்தின் டிஜிட்டல் உரிமை இப்போ ஆஹா ஓடிடி நிறுவனம் கைவசம்

By: Nagaraj Wed, 05 Oct 2022 11:52:31 AM

வாத்தி படத்தின் டிஜிட்டல் உரிமை இப்போ ஆஹா ஓடிடி நிறுவனம் கைவசம்

சென்னை: வாத்தி படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான ஆஹா தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக உள்ளார். அவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது, அவரது நடிப்பில் நானே வருவேன் திரைப்படமும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஆரம்ப நாட்களில் அதிரடி வசூல் நடத்தியது என்பதும் குறிப்பிட்டதக்கது.

dhanush,vathi films,digital rights,ott company,aha ,தனுஷ், வாத்தி படம், டிஜிட்டல் உரிமை,  ஓடிடி நிறுவனம், ஆஹா

தற்போது தனுஷ் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் வாத்தி திரைப்படம் வரும் டிசம்பர் 2-ந் தேதி திரையரங்கில் வெளியாகிறது. ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சீதாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் நாக வம்சி, சாய்சவுஜன்யா இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் சக்யுக்தா மேனன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சாய்குமார், தணிகெல்லா பரணி ஆகியோரும் நடித்துள்ளனர்.


இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான ஆஹா தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :