- வீடு›
- பொழுதுபோக்கு›
- படத்தை இயக்குனர் அருமையாக எடுத்துள்ளார்... நடிகர் விஜய் பாராட்டு?
படத்தை இயக்குனர் அருமையாக எடுத்துள்ளார்... நடிகர் விஜய் பாராட்டு?
By: Nagaraj Sat, 23 Sept 2023 12:55:22 PM
சென்னை: லியோ படத்தை பார்த்து முடித்தவுடன் மகிழ்ச்சி அடைந்ததாகவும், இயக்கு லோகேஷ் கனகராஜ் அருமையாக எடுத்துள்ளார் என்று நடிகர் விஜய் பாராட்டியதாக கோலிவுட்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படத்தின் ரிலீசுக்காக ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அளவு கடந்தே இருக்கிறது.
விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் லியோ படத்தின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகின்றனர். தற்போது லியோ படம் வெளியாக சில நாட்கள் இருக்கும் நிலையில், இப்படத்தை விஜய் பார்த்துவிட்டாராம்.
மேலும் படத்தை பார்த்து முடித்தவுடன் மகிழ்ச்சி அடைந்ததாகவும், லோகேஷ் கனகராஜ் அருமையாக எடுத்துள்ளார் என்று விஜய் சொன்னதாக தகவல்கள் உலா வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.