Advertisement

எதிர்பார்த்தது நடந்தது... அசல் கோளாறை வெளியேற்றினார் கமல்

By: Nagaraj Sun, 30 Oct 2022 8:55:59 PM

எதிர்பார்த்தது நடந்தது... அசல் கோளாறை வெளியேற்றினார் கமல்

சென்னை: எதிர்பார்த்தது நடந்தது... பிக்பாஸ் வீட்டில் இருந்து குறைந்த வாக்குகளை பெற்ற அசல் கோளாறை கமல் வெளியேற்றியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதி நாட்கள் எப்போதுமே வழமைக்கு மாறாக சுவாரஷ்யமாக இருக்கும். காரணம் கமலின் வருகையும், ஞாயிற்றுக்கிழமை நடக்கும் எலிமினேஷனும் தான்.

original glitch,votes,low,viewers,kicked out ,
அசல் கோளாறு, வாக்குகள், குறைந்த்து, பார்வையாளர்கள், வெளியேற்றப்பட்டார்

அந்த வகையில் இந்த வாரம் மக்கள் வாக்குகள் அடிப்படையில் அசல் கோளாறு தான் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவர் நிகழ்ச்சியில் பல பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அது கடந்த வாரத்தில் நடக்கவில்லை.

மக்களின் குறைந்த வாக்குகளினால் தற்போது அசல் கோளாறு வெளியேற்றப்பட்டிருக்கின்றார். இந்த வாரம் நிச்சயம் இவர் வெளியேற்றப்படுவார் என்று பார்வையாளர்கள் ஆரூடம் பார்த்து வந்த நிலையில் அது தற்போது பலித்துள்ளது.

Tags :
|
|