- வீடு›
- பொழுதுபோக்கு›
- பிரபல நடிகைக்கு பெண் குழந்தை பிறந்தது... மருத்துவர்களுக்கு நன்றி கூறினார்
பிரபல நடிகைக்கு பெண் குழந்தை பிறந்தது... மருத்துவர்களுக்கு நன்றி கூறினார்
By: Nagaraj Sat, 11 June 2022 7:39:50 PM
பெங்களூரு:நடிகை பிரணிதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அவர் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழில் கார்த்தி நடித்த 'சகுனி', சூர்யா நடித்த 'மாசு என்ற மாசிலாமணி', அருள்நிதி நடித்த உதயன், 'எனக்கு வாய்த்த அடிமைகள்' உட்பட சில படங்களில் நடித்தவர் பிரணிதா சுபாஷ். கன்னட நடிகையான இவர், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
பல்வேறு சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருபவர். கடைசியாக 'புஜ்: தி பிரைட் ஆப் இந்தியா' என்ற படத்தில் நடித்தார். அவர் நடிப்பில் வெளியான 'ஹங்கமா-2' படத்தில் படுகவர்ச்சியாக நடித்தார். இவர், கடந்த ஆண்டு நிதின் ராஜு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து, தனது கணவரின் 34-வது பிறந்த நாளின் போது, தான் தாய்மை அடைந்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர், கர்ப்ப காலத்தில் தன் உடல்நிலை எவ்வாறு உள்ளது என்ற புகைப்படத்தை, தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவர் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் அவருக்கு நேற்று அழகான பெண்குழந்தை பிறந்துள்ளது. தான் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை, தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ள பிரணிதா, மருத்துவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.