Advertisement

நடிகர் யோகி பாபுவின் லக்கி மேன் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

By: Nagaraj Sun, 13 Aug 2023 6:40:31 PM

நடிகர் யோகி பாபுவின் லக்கி மேன் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

சென்னை: நடிகர் யோகிபாபு படத்தின் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியது என்று கோலிவுட் வாசிகள் தெரிவிக்கின்றனர்.

பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகிபாபு. முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகிபாபு, தற்போது ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் திரைப்படம் 'லக்கி மேன்'. இப்படத்தில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

lucky man,yogi babu,celebrity company,capturing,announcement ,லக்கி மேன், யோகி பாபு, பிரபல நிறுவனம், கைப்பற்றுவது, அறிவிப்பு

திங்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. 'லக்கி மேன்' படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'லக்கி மேன்' படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். 'லக்கி மேன்' திரைப்படம் செப்டம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :