Advertisement

மாவீரன் டைட்டிலை மாவீரன் படையாண்டவன் என படக்குழு

By: Nagaraj Fri, 07 July 2023 11:49:39 PM

மாவீரன் டைட்டிலை மாவீரன் படையாண்டவன் என படக்குழு

சென்னை: இயக்குனர் கௌதமன் இயக்கும் படத்தின் மாவீரன் டைட்டிலை மாவீரன் படையாண்டவன் என படக்குழு மாற்றியுள்ளது.

வ கௌதமன் முரளி நடித்த கனவே கலையாதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பிறகு பல வருட இடைவெளிக்குப் பிறகு ‘மகிழ்ச்சி’ படத்தை இயக்கினார். இவர் இயக்கிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், அரசியலில் பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு பிரபலமானார்.

film,movie,song,kanave kalaiyathe,v. gauthaman,hero ,கனவே கலையாதே,  வ.கௌதமன், ஹீரோ

இந்நிலையில் இவர் தற்போது ஹீரோவாக நடித்து சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், இளசாரு, தீனா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள மாவீரன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

நெய்வேலி மற்றும் பண்ருட்டியில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது மாவீரன் டைட்டிலை மாவீரன் படையாண்டவன் என படக்குழு மாற்றியுள்ளது.

Tags :
|
|
|