Advertisement

கேஜிஎப்-3 குறித்து வீடியோவில் ஹிண்ட் கொடுத்த படக்குழு

By: Nagaraj Sat, 15 Apr 2023 1:16:19 PM

கேஜிஎப்-3 குறித்து வீடியோவில் ஹிண்ட் கொடுத்த படக்குழு

கர்நாடகா: கேஜிஎப் 2' படம் வெளியாகி ஒரு வருடம் ஆன நிலையில், ஹம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவின் முடிவில்தான் ரசிகர்களுக்காக ஒரு ஹிண்ட் கொடுத்துள்ளனர். அதன்படி, வீடியோவின் இறுதியில், 'KGF 3' படம் குறித்த மறைமுகமான அறிவிப்பை அந்த வீடியோவில் காட்டியுள்ளனர்.

ஹம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம்தான் 'கே.ஜி.எஃப்'. இப்படத்தில் ராக் ஸ்டார் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், ஆனந்த் நாக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தென்னிந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸில் 250 கோடியை அள்ளியது.

இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, கடந்தாண்டு இதே நாள் 'KGF chapter 2' திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகி, முதல் பாகத்தைவிட அதிகளவு வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடியை வாரிக் குவித்தது.

joy,excitement,kgf3,video,fans,announcement ,மகிழ்ச்சி, உற்சாகம், கேஜிஎப் 3, வீடியோ, ரசிகர்கள், அறிவிப்பு

இப்படத்திற்கு இந்திய அளவில் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு இருந்து வருவது மட்டுமல்லாமல், இப்படத்தின் அடுத்த பாகம் எப்போது வரும் என்ற ஆவலுடன் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

இதையடுத்து, அந்தப் படத்தின் ‘சீக்குவல்’ எனப்படும் அடுத்தடுத்த விஷயங்களை ஐந்து பாகங்களாக எடுக்க அந்தப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு முன்னதாக ஒரு தகவல் பரவி வந்தது.

இந்நிலையில், 'கேஜிஎப் 2' படம் வெளியாகி ஒரு வருடம் ஆன நிலையில், ஹம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவின் முடிவில்தான் ரசிகர்களுக்காக ஒரு ஹிண்ட் கொடுத்துள்ளனர்.

அதன்படி, வீடியோவின் இறுதியில், 'KGF 3' படம் குறித்த மறைமுகமான அறிவிப்பை அந்த வீடியோவில் காட்டியுள்ளனர். இதைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உற்சாகமடைந்துள்ளனர்.

Tags :
|
|
|
|