Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • 'சாகுந்தலம்' படத்தின் புதிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக படக்குழு தெரிவிப்பு

'சாகுந்தலம்' படத்தின் புதிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக படக்குழு தெரிவிப்பு

By: vaithegi Sun, 01 Jan 2023 6:31:35 PM

'சாகுந்தலம்' படத்தின் புதிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக படக்குழு தெரிவிப்பு

நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள 'சாகுந்தலம்' படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை குணசேகர் இயக்கியுள்ளார்.

இதனை அடுத்து ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 4-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

film crew,sagunthalam ,படக்குழு ,சாகுந்தலம்

அதன்பின் படத்தை 3-டியில் மாற்ற உள்ளதாகவும், இதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு அறிவித்திருந்தது.

இதையடுத்து இந்த நிலையில் 'சாகுந்தலம்' படத்தின் புதிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

Tags :