Advertisement

தீக்காரி பாடலின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு

By: Nagaraj Tue, 28 Feb 2023 3:32:59 PM

தீக்காரி பாடலின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு

ஐதராபாத்: மேக்கிங் வீடியோ வெளியீடு... நானி நடித்துள்ள 'தசரா' படத்தின் 'தீக்காரி' பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, 'அடடே சுந்தரா' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

film crew,making video,release,thikari song,nani ,படக்குழு, மேக்கிங் வீடியோ, வெளியீடு, தீக்காரி பாடல், நானி

ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இரண்டாவது பாடலான 'தீக்காரி' பாடலை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. இந்த நிலையில், தற்போது 'தீக்காரி' பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :