Advertisement

விஜய் ஆண்டனியின் ரோமியோ படத்தின் போஸ்டரை வெளியிட்ட படக்குழு

By: Nagaraj Thu, 17 Aug 2023 8:05:11 PM

விஜய் ஆண்டனியின் ரோமியோ படத்தின் போஸ்டரை வெளியிட்ட படக்குழு

சென்னை: விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ படத்தின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட விஜய் ஆண்டனி, தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடித்த ‘பிச்சைக்காரன் 2’, ‘கொலை’ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ‘ரோமியோ’ படத்தில் நடித்து வருகிறார்.

romantic hero,thanks to people,vijay antony ,காதல் ஹீரோ, விரும்பியவர்கள், விஜய் ஆண்டனி, போஸ்டர், ஆசை

இப்படத்தில் விஷாலின் ‘எதிரி’ படத்தில் நடித்த மிருணாளினி ரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். குட் டெவில் புரொடக்ஷன் சார்பில் விஜய் ஆண்டனி வழங்கும் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ரோமியோ’ படம் அடுத்த ஆண்டு (2024) கோடையில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.

ரோமியோ போஸ்டர் மேலும், இந்த போஸ்டரை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள விஜய் ஆண்டனி, “என்னை காதல் ஹீரோவாக பார்க்க விரும்பியவர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி. உங்கள் ஆசை நிறைவேறியது” என்று எழுதியுள்ளார்.

Tags :