Advertisement

விஜய் படத்தின் படப்பிடிப்பை நிறுத்திய படக்குழுவினர்

By: Nagaraj Thu, 16 June 2022 8:13:41 PM

விஜய் படத்தின் படப்பிடிப்பை நிறுத்திய படக்குழுவினர்

சென்னை: படப்பிடிப்பு படங்கள் சமூக வலைதளங்களில் லீக் ஆவதால் நடிகர் விஜய் உள்பட முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகி வரும், ‘தளபதி 66’ படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தை படக்குழு மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகும் புதியப் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ‘தளபதி 66’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் ஷிரிஷின் ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தநிலையில், சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் செட் அமைக்கப்பட்டு சில நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில், படப்பிடிப்பை படக்குழு திடீரென நிறுத்தி வைத்துள்ளது.

pictures,league,commander film,defense,set,film crew ,படங்கள், லீக், தளபதி படம், பாதுகாப்பு, செட், படக்குழு

கடந்த சில நாட்களாக ‘தளபதி 66’ படப்பிடிப்பு தளத்திலிருந்து, நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ ஆகியோரின் காட்சிகள் மற்றும் கதாபாத்திர தோற்றங்கள் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் அடுத்தடுத்து வெளியாகி படக்குழு மற்றும் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையடுத்து தற்போது படப்பிடிப்பை நிறுத்திவிட்டு வேறொரு தனி இடத்தில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து புதிய இடத்தில் மீண்டும் செட் அமைக்கப்பட்டு வருகிறது. ஒரு சில தினங்களில் இந்தப் பணிகள் நிறைவடைந்ததும், மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இந்த விவகாரங்களால் படக்குழுவிற்கு பணிச்சுமை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. புதிய இடத்தில் பாதுகாப்பை பலப்படுத்தவும் படக்குழு ஈடுபட்டுள்ளது.

Tags :
|
|