Advertisement

ஒரே ஷாட் 105 நிமிடங்கள் ஓடும் நடிகை ஹன்சிகா நடித்துள்ள படம்

By: Nagaraj Fri, 03 Feb 2023 10:41:16 AM

ஒரே ஷாட் 105 நிமிடங்கள் ஓடும் நடிகை ஹன்சிகா நடித்துள்ள படம்

சென்னை: நடிகை ஹன்சிகா நடித்துள்ள ஒன் நாட் பைவ் மினிட்ஸ் படம் மிக சுவாரசியமான சம்பவங்களுடன் ஒரே ஷாட்டில் 105 நிமிடங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இது சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ளது.

ராஜு துசா இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள படம் ‘ஒன் நாட் பைவ் மினிட்ஸ்’. படம் சிங்கிள் ஷாட்டில் உருவாகியுள்ளது. ருத்ரனின் செல்லுலாய்ட்ஸ் சார்பில் பொம்மக் சிவா தயாரித்துள்ளார். ஹன்சிகாவை வைத்து ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட இந்தப் படம் ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடக்கூடியது.

அதாவது மிக சுவாரசியமான சம்பவங்களுடன் ஒரே ஷாட்டில் 105 நிமிடங்கள் படம் எடுக்கப்பட்டுள்ளது. இது சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ளது.

actress hansika,movie,single shot , சிங்கிள் ஷாட், திரைப்படம், நடிகை ஹன்சிகா

ஒளிப்பதிவு கிஷோர் பைதாபு, இசை சாம் சிஎஸ். டிரைலர் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படம் தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. இப்படம் 1917ல் வெளியான ஹாலிவுட் படமான ‘பேர்ட்மேன்’ பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

சில படங்கள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டாலும், கதை பல கதாபாத்திரங்களைச் சுற்றியே நகர்கிறது. ஆனால் ‘ஒன் நாட் ஃபைவ் மினிட்ஸ்’ படத்தின் கதை ஒரே ஒரு கதாபாத்திரத்தைச் சுற்றியே நகர்கிறது. கிரீன்மேட் ஷாட்கள் பயன்படுத்தப்படவில்லை.

Tags :
|