Advertisement

இறைவன் படத்தின் டிரைலரை நாளை வெளியிடுவதாக படக்குழு அறிவிப்பு

By: Nagaraj Sat, 02 Sept 2023 3:34:27 PM

இறைவன் படத்தின் டிரைலரை நாளை வெளியிடுவதாக படக்குழு அறிவிப்பு

சென்னை: இறைவன் படத்தின் டிரைலரை நாளை 3ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த நயன்தாராவும் ஜெயம் ரவியும் மீண்டும் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் இறைவன். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

என்றென்றும் புன்னகையின் இயக்குநர் ஐ. அஹமது இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது.

announcement,lord,trailer,tomorrow,releases,jayam ravi ,அறிவிப்பு, இறைவன், டிரைலர், நாளை, வெளியிடுகிறது, ஜெயம் ரவி

மேலும், இப்படம் வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இறுதிக்கட்ட பணிகள் இன்னும் முடிவடையாததால் செப்.28ம் தேதி இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை நாளை 3 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
|