Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • தமிழ்க்குடிமகன் படம் வரும் செப்.7ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தகவல்

தமிழ்க்குடிமகன் படம் வரும் செப்.7ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தகவல்

By: Nagaraj Sun, 20 Aug 2023 4:49:16 PM

தமிழ்க்குடிமகன் படம் வரும் செப்.7ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தகவல்

சென்னை: இயக்குனர் சேரனின் தமிழ்க்குடிமகன் படம் செப்.7ம் நாள் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

ஆட்டோகிராப் படத்தின் மூலம் மக்களின் மத்தியில் கவனம் பெற்ற இயக்குநர் நடிகருமான சேரன் பிறந்தநாளில் அவரது ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் போஸ்டர் வெளியானது. லக்‌ஷ்மி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ‘பகிரி’, ‘பெட்டிக்கடை’ படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சாம் சி.எஸ். இசையில் இப்படம் உருவாகியுள்ளது.

director cheran,trailer,crew,information,tamilkutimagan ,இயக்குனர் சேரன், டிரைலர், படக்குழு, தகவல், தமிழ்க்குடிமகன்

முதல் பார்வை போஸ்டரை பகிர்ந்து இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்திருந்தார். பல்வேறு திரைப்பிரபலங்களும் இந்த போஸ்டரை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தனர்.

பிரபலங்களுக்கு மத்தியில் துப்புரவு பணியாளர்கள் இந்தப் போஸ்டரை வெளியிட்டது வித்தியாசமான அணுகுமுறையாக இருந்தது.
சமீபத்தின் இதன் டிரைலர் வெளியாகி நல்ல கவனம் பெற்றது. இந்நிலையில் படம் செப்.7ஆம் நாள் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

Tags :
|