Advertisement

‘விடாமுயற்சி’ படத்தின் வில்லனை மாற்றி உள்ளதாம் படக்குழு

By: vaithegi Thu, 19 Oct 2023 10:33:20 AM

‘விடாமுயற்சி’ படத்தின் வில்லனை மாற்றி உள்ளதாம் படக்குழு

அஜித் ரசிகர்கள் அனைவரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ரெஜினா, திரிஷா, சஞ்சய் தத், உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த வருவதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்த நிலையில், இந்த மாதம் தொடக்கத்திலே படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கியது . இந்த திரைப்படத்தை பார்க்க கோலிவுட் சினிமாவை பெரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படம் குறித்த எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகாமல் இருக்கிறது.

persistence,update,villain ,விடாமுயற்சி,அப்டேட்,வில்லன்

படத்திற்கான படப்பிடிப்பும் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்த அறிவிப்பும் கூட வெளியாகவே இல்லை வரும் வெறும் சினிமா வட்டாரத்தில் கசிந்த தகவல் தான் ரசிகர்களுக்கு அப்டேட் ஆக அமைந்தது.

இதற்கிடையில், படத்தில் சஞ்சய் தத் நடிப்பதன் காரணமாக படத்தில் வில்லனாக அவர் தான் நடிக்கிறார் என கூறப்பட்டது. ஆனால், தற்போது கிடைத்திருக்க கூடிய தகவல் என்னவென்றால், இத்திரைப்படத்தில் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க வில்லையாம். அவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறாராம்.வில்லனாக நடிகர் அர்ஜுன்தான் நடித்து வருகிறாராம். இதை பட குழு சஸ்பென்ஸ் -ஆக வைத்திருப்பதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

Tags :
|