Advertisement

கடுவா படத்தை தமிழில் வெளியிட படக்குழு திட்டம்

By: Nagaraj Thu, 23 Feb 2023 10:14:52 PM

கடுவா படத்தை தமிழில் வெளியிட படக்குழு திட்டம்

திருவனந்தபுரம்: ‘கடுவா’ படத்தை தமிழில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பிருத்விராஜ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘கடுவா’. ஷாஜி கைலாஸ் இயக்கிய இந்தப் படத்தில் நடிகை சம்யுக்தா கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ‘கடுவா’ படத்தை தமிழில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

kadua,malayalam film,tamil release, ,மலையாளத் திரைப்படம் கடுவா, ரிலீஸ்

மேலும், படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. இதன்படி ‘கடுவா’ திரைப்படம் மார்ச் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என போஸ்டரை வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கோல்டு’ மற்றும் ‘கப்பா’ ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றதையடுத்து, ‘கடுவா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags :
|