Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகர் பகத் பாசில் பிறந்தநாளில் புஷ்பா-2 போஸ்டரை வெளியிட்ட படக்குழு

நடிகர் பகத் பாசில் பிறந்தநாளில் புஷ்பா-2 போஸ்டரை வெளியிட்ட படக்குழு

By: Nagaraj Tue, 08 Aug 2023 8:38:15 PM

நடிகர் பகத் பாசில் பிறந்தநாளில் புஷ்பா-2 போஸ்டரை வெளியிட்ட படக்குழு

சென்னை: நடிகர் பகத் பாசிலின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ‘புஷ்பா-தி ரூல்’ படத்தில் நடிக்கும் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜெகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘புஷ்பா’. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாகி தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூல் செய்தது.

actor,bhagat basil,birthday,film crew,greetings,poster,pushpa-2 ,நடிகர், பகத் பாசில், படக்குழு, பிறந்தநாள், புஷ்பா-2, போஸ்டர், வாழ்த்து

தற்போது ‘புஷ்பா-தி ரூல்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

இதையடுத்து இயக்குனர் சுகுமார் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, படத்தில் நடிகர் பகத் பாசிலின் காட்சிகள் முடிந்துவிட்டதாக அறிவித்தார். இந்நிலையில் நடிகர் பகத் பாசிலின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ‘புஷ்பா-தி ரூல்’ படத்தில் நடிக்கும் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
|
|