Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • லியோ சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி, இன்று மாலை அரசு அதிகாரிகளுடன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை

லியோ சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி, இன்று மாலை அரசு அதிகாரிகளுடன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை

By: vaithegi Tue, 17 Oct 2023 4:50:41 PM

லியோ சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி, இன்று மாலை அரசு அதிகாரிகளுடன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை

லியோ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், காலை 4 மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி கோரிய வழக்கில், இதை தமிழக அரசே முடிவு செய்யும் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. எனவே அதன்படி, 9 மணி காட்சிக்கு பதிலாக, 7 மணிக்கு தொடங்க தமிழக அரசிடம் மனு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், லியோ படத்திற்கு காலை 7 மணிக்கு சிறப்பு காட்சி அனுமதி தொடர்பாக தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் இன்று மாலை 4 மணிக்கு பட படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக இன்று மாலை அல்லது நாளை மதியத்திற்குள் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

leo,manufacturing company,chennai high court ,லியோ ,தயாரிப்பு நிறுவனம் ,சென்னை உயர்நீதிமன்றம்


இதன் இடையில், சினிமா விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டதில்லை எஎன்று ன அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், லியோ திரைப்படத்திற்கு 5 சிறப்பு காட்சிகள் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

திரை உலகம் எங்களுடை நட்பு உலகம், திமுக அரசு திரைத்துறையை முடக்கவில்லை, அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துகிறோம். லியோ திரைப்பட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்து உள்ளார்.

Tags :
|