Advertisement

வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் பிக்பாஸ் 4 தொடக்கம்

By: Nagaraj Fri, 25 Sept 2020 10:18:47 AM

வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் பிக்பாஸ் 4 தொடக்கம்

வரும் 4ம் தேதி முதல் தொடக்கம்... நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வரும் 4ம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தமிழ் தொலைகாட்சிகளில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ளன.

big boss 4,october,kamal haasan,launch ,பிக்பாஸ் 4, அக்டோபர், கமல்ஹாசன், தொடக்கம்

வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கப்படும் இந்நிகழ்ச்சி இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சற்று தாமதமாக தொடங்க உள்ளது.

கடந்த மாதம் பிக்பாஸ் 4வது சீசன் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிய போதும், இன்னும் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. அத்துடன் அதில் கலந்துகொள்ளும் நடிகர், நடிகைகள் யார் என்பதையும் சஸ்பென்சாக வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி முதல் பிக்பாஸ் 4 தொடங்கிறது என்று தெரிய வந்துள்ளது.

Tags :