Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகர் பிரபாஸ் நடித்து வரும் படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது!

நடிகர் பிரபாஸ் நடித்து வரும் படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது!

By: Monisha Fri, 10 July 2020 12:24:14 PM

நடிகர் பிரபாஸ் நடித்து வரும் படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது!

நடிகர் பிரபாஸ் பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம் உலகப் புகழ்பெற்றார். ஆனால் அவர் அடுத்து நடித்த திரைப்படமான 'சாஹோ' எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் சூப்பர் ஹிட் படம் ஒன்றை கொடுக்க முடிவு செய்து கமிட்டான படம்தான் 'பிரபாஸ் 20'. இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கிற்கு முன் வரை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அதன் வெளியாவதாக செய்திகள் வெளிவந்தது.

actor prabhas,first look poster,shooting,super hit ,நடிகர் பிரபாஸ்,ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்,படப்பிடிப்பு,சூப்பர் ஹிட்

அதன்படி, தற்போது இந்த படத்திற்கு 'ராதே ஷ்யாம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றும் வெளியாகி இணையதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த கலர்புல்லான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தை ராதா கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கி வருகிறார். பிரகாஷ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு முடிந்ததும் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Tags :