Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகர் விஜய்யின் லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு டிரெண்டிங்கில் நம்பர் 1 இடம்

நடிகர் விஜய்யின் லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு டிரெண்டிங்கில் நம்பர் 1 இடம்

By: Nagaraj Thu, 22 June 2023 12:41:16 PM

நடிகர் விஜய்யின் லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு டிரெண்டிங்கில் நம்பர் 1 இடம்

சென்னை: நடிகர் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தற்போதைய டிரெண்டிங்கில் நம்பர் 1 இடம் பெற்றுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மடோனா சபாஸ்டியன், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

first look,review,leo movie,poster,viral ,பர்ஸ்ட் லுக்,  விமர்சனம், லியோ படம், போஸ்டர், வைரல்

இப்படத்தின் முதல் பாடல் 'நா ரெடி' இன்று விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. நேற்று இரவு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்திருந்தது.

வெறித்தனமாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த போஸ்டர் தான் தற்போதைய டிரெண்டிங்கில் நம்பர் 1. இந்நிலையில், ஒரு பக்கம் வாழ்த்து மழை இருந்தாலும், மறுபக்கம் விமர்சனமும் எழுந்தது.

லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்ப்பதற்கு Game of Thrones வெப் தொடரில் வரும் கதாநாயகன் ஜான் ஸ்னோவ் போஸ்டர் லுக் போலவே இருக்கிறது என கூறி விமர்சித்து வருகிறார்கள். அந்த போஸ்டர்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.

Tags :
|
|