Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

By: Nagaraj Mon, 16 Jan 2023 2:12:59 PM

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

சென்னை: ஃபேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா படத்தின் பர்ஸட் லுக் போஸ்டர் வெளியாகியது.

தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி திருப்புமுனையாக அமைந்தது.

இதனையடுத்து கமர்ஷியல் படங்களுடன் தனி கதாநயாகியாகவும் படங்களில் அசத்தி வருகிறார். அப்படி அவர் தனி கதாநாயகியாக நடித்த மிஸ் இந்தியா, பென்குயின் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை எனினும் சாணிக் காயிதம் நல்ல வரவேற்பினைப் பெற்றது.

film crew,netflix,anwari,revolver rita,keerthysuresh ,படக்குழு, நெட்பிளிக்ஸ், அறிவிப்பு, ரிவால்வர் ரீட்டா, கீர்த்திசுரேஷ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன், தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் ‘ரகு தாத்தா’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் கடந்த 14ம் தேதி புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. ஃபேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியது. கே. சந்துரு எழுத் இயக்குகிறார். பிரவீன் கே.எல். எடிட்டிங் செய்ய தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

திரையில் வெளியாகும் முன்பே இதன் டிஜிட்டல் ஓடிடி முடிவு செய்யப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

Tags :
|