Advertisement

வெளியானது ‘லியோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

By: vaithegi Thu, 22 June 2023 11:42:32 AM

வெளியானது ‘லியோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படக்குழு திரைப்படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டுள்ளது ... தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் லியோ. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜூன், திரிஷா, மிஷ்கின் என பிரபல சினிமா நட்சத்திரங்கள் உடன் நடித்து உ வருகின்றனர். இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது.

இதையடுத்து இன்று விஜய் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு இந்த படத்தின் முதல் போஸ்டர் வெளியானது. அதில் விஜய் கையில் பெரிய சுத்தியலுடன் ரத்தம் தெறிக்க தெறிக்க ஓநாய் படைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது.

leo,poster ,லியோ,போஸ்டர்

இதுவரை வந்த விஜய் படங்களில் ரத்தம் தெரிக்க ஒரு முதல் படத்தின் முதல் போஸ்டர் வெளியானதில்லை. லியோ திரைப்படத்தின் வெறித்தனமான போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி கொண்டு வருகின்றனர்.

மேலும், இன்று 49 -வது பிறந்தநாள் காணும் விஜய்க்கு வாழ்த்துக்களும் குவிந்து கொண்டு வருகிறது. அதனால் இன்றைய தினம் இணையதளத்தில் டாப் ட்ரெண்டிங்கில் தளபதி விஜய் தான் இருப்பார்.

Tags :
|