Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த மாதம் வெளியாகும் என தகவல்

தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த மாதம் வெளியாகும் என தகவல்

By: vaithegi Tue, 23 May 2023 11:38:24 AM

தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த மாதம் வெளியாகும் என தகவல்

விஜய் நடிக்கவுள்ள அவருடைய 68-வது படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் மாதம் வெளியாகும் என தகவல் ....நடிகர் விஜயின் 68-வது திரைப்படத்தை பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு இயக்குகிறார்.

இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜ இசையமைக்கவுள்ளார். படம் மிகப்பெரிய பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ளது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வெளியானது.

first look poster,commander 68 , பர்ஸ்ட் லுக் போஸ்டர்,தளபதி 68

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஆனால், அதற்கு முன்பு அதாவது ஆகஸ்ட் மாதமே தளபதி 68 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தளபதி 68 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்போதே தலைப்பு எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனவே, வரும் ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 68 படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :