Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பாலா தயாரிப்பில் உருவாகி வரும் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியது!

பாலா தயாரிப்பில் உருவாகி வரும் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியது!

By: Monisha Wed, 23 Sept 2020 12:14:52 PM

பாலா தயாரிப்பில் உருவாகி வரும் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியது!

தேசிய விருது பெற்ற பாலா இயக்கிய 'வர்மா' திரைப்படம் இன்னும் ரிலீஸாகாத நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்றாலும், பாலாவின் பி ஸ்டுடியோ நிறுவனம் ஒரு படத்தை தயாரித்து வருகிறது.

பாலாவின் பி ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் ஆர்கே சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் ஒரு தயாரிப்பாளர் என்றாலும், பாலாவின் 'தாரை தப்பட்டை' திரைப்படத்தில் தான் நடிகராக அறிமுகமானார்.

இந்த நிலையில் பாலா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இன்று அதாவது செப்டம்பர் 23ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடுவார் என்று கூறப்பட்டது.

director bala,b studio,title,firstlook poster,rk suresh ,இயக்குனர் பாலா,பி ஸ்டுடியோ,டைட்டில்,ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்,ஆர்கே சுரேஷ்

இதனையடுத்து இந்த படத்திற்கு 'விசித்திரன்' என்ற டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

ஆர்கே. சுரேஷ், பூர்ணா உள்பட பலர் நடிக்கும் இந்த படம் பத்மகுமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வருகிறது. இந்த படம் மலையாளத்தில் வெளியான ‘ஜோசப்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

Tags :
|