Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் சிங்கிள் அகநக என தொடங்கும் பாடல் இன்று வெளியீடு

பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் சிங்கிள் அகநக என தொடங்கும் பாடல் இன்று வெளியீடு

By: vaithegi Mon, 20 Mar 2023 2:21:21 PM

பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் சிங்கிள் அகநக என தொடங்கும் பாடல் இன்று வெளியீடு


இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28, 2023 அன்று திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தின் 1 பாகம் உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.

ஆனால் தமிழகத்தில் மட்டுமே 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. ஆனால், படத்தில் பல பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தாலும் கூட, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் நல்ல வசூலை ஈட்ட முடியவில்லை. சில பகுதிகளில் 1 பாகம் வெளியாகவும் இல்லை. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் 2 விநியோகஸ்தர்களைப் பெறுவதில் சிரமம் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

ponnis selvan,song ,பொன்னியின் செல்வன்,பாடல்


ஏனெனில் 1 பக்கம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வசூல் ரீதியாக தோல்வியடைந்துள்ளதாம். எனவே, 2-ம் பாகம் தெலுங்கு விநியோகஸ்தர்களைப் பெற முடியாமல் திணறி வருகிறது. பொன்னியின் செல்வன் 2 படத்தின் உரிமையை வாங்க எந்த ஒரு தெலுங்கு விநியோகஸ்தர்களும் தயாராக இல்லை எனவும் தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும் படம் வெளியாக இன்னும் சில நாட்கள் இருப்பதால் வரும் நாட்களில் புரொமோஷன் செய்வதன் மூலம் படம் நல்ல வியாபாரம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் ,பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் சிங்கிள் அகநக என தொடங்கும் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

Tags :