Advertisement

மயில்சாமியின் கடைசி படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது

By: Nagaraj Mon, 20 Mar 2023 8:36:02 PM

மயில்சாமியின் கடைசி படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது

சென்னை: மயில்சாமியின் கடைசிப் படமான கிளாஸ்மேட்ஸ் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘கண்ணு முன்னே’ வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான மயில்சாமி கடந்த மாதம் 19ம் தேதி திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை சாலிகிராமத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது பொதுமக்களும், திரையுலகினரும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

actor,mayilsamy,song, ,மயில்சாமி, முதல் சிங்கிள், வெளியீடு

இந்நிலையில், மயில்சாமியின் கடைசிப் படமான கிளாஸ்மேட்ஸ், ஏற்கனவே அவர் நடித்திருந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘கண்ணு முன்னே’ தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

Tags :
|
|