Advertisement

செம டிரெண்ட் ஆகி வரும் சந்திரமுகி 2 படத்தின் முதல் பாடல்

By: Nagaraj Fri, 11 Aug 2023 8:49:54 PM

செம டிரெண்ட் ஆகி வரும் சந்திரமுகி 2 படத்தின் முதல் பாடல்

சென்னை; செம டிரெண்ட் ஆகிறது... ‘சந்திரமுகி-2’ படத்தின் முதல் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘சந்திரமுகி-2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு, ராதிகா மற்றும் பல பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைத்துள்ளார்.

attention-grabbing,chandramukhi-2 first,raghava lawrence starrer ,சந்திரமுகி-2, முதல் பாடல்,  கவனத்தை ஈர்க்கும், விநாயகர் சதுர்த்தி

‘சந்திரமுகி 2’ தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகிறது. சமீபத்தில் லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து ‘ஸ்வாகதாஞ்சலி’ படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி இந்த பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Tags :