Advertisement

குண்டூர் காரம் படத்தின் முதல் பாடல் வெளியாகி செம வைரல்

By: Nagaraj Wed, 08 Nov 2023 7:20:05 PM

குண்டூர் காரம் படத்தின் முதல் பாடல் வெளியாகி செம வைரல்

சென்னை: தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் குண்டூர் காரம் படத்தின் முதல் பாடலான தம் மசாலா பாடல் வெளியாகியுள்ளது.

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு. பிரபல தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் குண்டூர் காரம் படத்தில் நடித்து வருகிறார்.

எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தில் தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருந்தார். நடிகைகள் ஸ்ரீ லீலா, பூஜா ஹக்டே, நடிகர் ஜகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக இருந்தது.

guntur karam,fans,focus,tam masala song,movie ,குண்டூர் காரம், ரசிகர்கள், கவனம், தம் மசாலா பாடல், படம்

இந்தப் படத்திலிருந்து இசையமைப்பாளர் தமன், நடிகை பூஜா ஹெக்டே விலகியுள்ளதாக தகவல் வெளியானதும் பின்னர் பூஜா ஹெக்டே மட்டும் விலகியதாக தகவல்கள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ லீலா உடன் மீனாக்‌ஷி சௌத்ரியும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். இந்நிலையில் படத்தின் முதல் பாடலான தம் மசாலா பாடல் வெளியாகியுள்ளது.

பிரியாணி குறித்த வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு எழுதப்பட்டுள்ள இந்தப்பாடல் ரசிகர்களிடையே கவன்ம் பெற்று வருகிறது.

Tags :
|
|