Advertisement

கதிர் நடித்துள்ள ஆசை படத்தின் முதல் பாடல் வெளியானது

By: Nagaraj Sun, 19 Feb 2023 10:15:21 PM

கதிர் நடித்துள்ள ஆசை படத்தின் முதல் பாடல் வெளியானது

சென்னை: முதல் பாடல் வெளியானது... கதிர், திவ்யபாரதி நடித்துள்ள ‘ஆசை’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அனுராஜ் மனோகர் இயக்கத்தில் கடந்த ஆண்டு 2019 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள ஹிட் ரொமாண்டிக் த்ரில்லர் படமான ‘இஷ்க்’ வெளியாகியுள்ளது. இப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது.

aasai,divyabharathi,kathir,song, ,ஆசை, கதிர், தமிழில், திவ்யபாரதி

இப்படத்தை ‘ஜீரோ’ புகழ் ஷிவ் மோஹா இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை திவ்யாபாரதி நடிக்கிறார். நடிகர் அஜித், சுவலஷ்மி நடிப்பில் வசந்த் இயக்கத்தில் 1995-ம் ஆண்டு வெளியான படம் ‘ஆசை’. இந்த படத்தில் நடிகை பூர்ணா, லிங்கா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்கு ரேவா இசையமைக்கிறார். பாபு குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுதர்சன் படத்தொகுப்பு செய்கிறார். ‘ஆசை’ படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘காதல் ஜிராம்’ என்ற பாடலை விவேகா எழுதியுள்ளார். கபில் கபிலன் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
|
|
|