- வீடு›
- பொழுதுபோக்கு›
- லியோ படத்தின் முதல் பாடல் விஜய் பிறந்தநாளில் வெளியாகிறது
லியோ படத்தின் முதல் பாடல் விஜய் பிறந்தநாளில் வெளியாகிறது
By: Nagaraj Fri, 16 June 2023 8:40:01 PM
சென்னை: லியோ படத்தின் முதல் பாடல் வெளியாவது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் உடன் இரண்டாம் முறையாக கூட்டணி வைத்துள்ளார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.
விஜய்யின் பிறந்த நாள் முன்னிட்டு லியோ படம் குறித்து அப்டேட் வரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது லியோ படத்தின் முதல் பாடல் ‘நா ரெடி’ ஜூன் 22ம் விஜய்யின் பிறந்த நாள் முன்னிட்டு வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.
Tags :
vijay |
birthday |
update |