Advertisement

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் முதல் பாடல் வெளியானது

By: Nagaraj Fri, 17 July 2020 10:49:46 AM

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் முதல் பாடல் வெளியானது

டாக்டர் படத்தின் முதல் பாடல்... நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்டர்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘ஹீரோ’ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘டாக்டர்’. ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று (ஜூலை 16) இரவு வெளியானது.

வித்தியாசமான அறிவிப்புடன் வெளியான இந்தப் பாடல் வீடியோவை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். பாடல் துவங்குவதற்கு முன்னதாக ‘எந்த மாதிரி பாடல் வேண்டும்’ என அனிருத் கேட்கிறார்.

doctor film,sivakarthikeyan,first song,sellamma ,டாக்டர் படம், சிவகார்த்திகேயன், முதல் பாடல், செல்லம்மா

அதற்கு சிவகார்த்திகேயன் ‘வேற லெலவில் ஹிட் ஆகணும் சார். டிக் டாக்கில் மில்லியன், பில்லியன்னு போகணும் சார். டிக் டாக்க திறந்தா நம்ம பாட்டு தான் இருக்கணும் சார்’ என சொல்கிறார்.

‘அதுக்கு முதல்ல டிக் டாக் இருக்கணுமே சார்’ என்று அனிருத் பதிலளிக்கிறார். தொடர்ந்து டிக் டாக் தடை பற்றியே பாடல் உருவாக்கலாம் என்று கூறி இந்த ‘செல்லம்மா’ பாடலை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

அனிருத் இசையில் அமைந்திருக்கும் பாடலின் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். ஜோனிதா காந்தியுடன் இணைந்து அனிருத் பாடியுள்ள ‘செல்லம்மா’ பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் வினய், யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Tags :