- வீடு›
- பொழுதுபோக்கு›
- ரசிகர்களை கவர்ந்த மாவீரன் படத்தின் முதல் பாடல்
ரசிகர்களை கவர்ந்த மாவீரன் படத்தின் முதல் பாடல்
By: Nagaraj Mon, 20 Feb 2023 9:45:56 PM
சென்னை: மாவீரன் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மாவீரன்’. இப்படத்தில் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
"டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். 'மாவீரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது.
இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். மாவீரன் படத்தின் முதல் பாடலான 'சீனா சீனா' பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.
கவிஞர்கள் கபிலன் மற்றும் லோகேஷ் வரிகளில் அனிருத் பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.