Advertisement

வசூலில் சாதனை படைத்த மூக்குத்தி அம்மன் திரைப்படம்!

By: Monisha Fri, 11 Dec 2020 4:14:51 PM

வசூலில் சாதனை படைத்த மூக்குத்தி அம்மன் திரைப்படம்!

ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நயன்தாரா. அந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் முன்னணி கதாநாயகி ஆனார். பிரபல கதாநாயகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்தார்.

பின்னர் சில ஆண்டுகள் முன்பு வெளியான 'மாயா' படம் அவருடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்டது. அந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து நயன்தாராவுக்காக, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையும், கதாபாத்திரங்களும் உருவாக்கப்பட்டன.

mookkuthi amman,movie,achievement,lady superstar,nayanthara ,மூக்குத்தி அம்மன்,திரைப்படம்,சாதனை,லேடி சூப்பர் ஸ்டார்,நயன்தாரா

நானும் ரவுடிதான், அறம் போன்ற படங்களின் வெற்றி அவருடைய நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தியது. மேலும் ரசிகர்கள் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்தனர்.

தற்போது சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த 'மூக்குத்தி அம்மன்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது. ரூ.13 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம், இதுவரை ரூ.27 கோடி வசூல் செய்து இருக்கிறது. இதன் மூலம் தென்னிந்தியாவிலேயே வேறு எந்த கதாநாயகிக்கும் இல்லாத அளவுக்கு நயன்தாராவின் 'மார்க்கெட்' அந்தஸ்து உயர்ந்து இருக்கிறது.

Tags :
|