Advertisement

சூர்யா நடித்து வரும் புதிய படத்தில் விமான சண்டை செம ஹைலைட்டாம்

By: Nagaraj Fri, 17 Mar 2023 11:24:23 PM

சூர்யா நடித்து வரும் புதிய படத்தில் விமான சண்டை செம ஹைலைட்டாம்

சென்னை; நடிகர் சூர்யா – இயக்குனர் சிவா கூட்டணியில் உருவாகி வரும் படத்தில் விமான சண்டை ஹைலைட்டாக இருக்கும் என கூறப்படுகிறது.

விரைவில் நடிகர் சூர்யா தற்போது தனது 42வது படமான சிறுத்தை சிவா இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த படத்தில் சூர்யா பல்வேறு வில்லன் கேரக்டர்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுடன் பாலிவுட் நடிகை திஷா பதானியும் நடிக்கிறார்.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

film,shooting,siruthai siva,social, ,கவனம், சிவா, சூர்யா, ஞானவேல் ராஜா

சூர்யா 13 வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போதைய தகவலின்படி, அவர் 5 (அல்லது) 6 வேடங்களில் நடிக்க வாய்ப்புள்ளது. இன்னும் பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், பீரியட் போர்ஷன் முடிந்து அடுத்த கதாபாத்திரங்களை விரைவில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு சிறப்பு காட்சி இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில். விமான சண்டை படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என கூறப்படுகிறது. விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் ப்ரோமோ வீடியோவை வெளியிட படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.மேலும் இப்படத்தை பொன்னியின் செல்வன் ஸ்டைலில் 2 பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Tags :
|
|