- வீடு›
- பொழுதுபோக்கு›
- கொரோனாவில் இருந்து மனித இனம் நிச்சயம் மீண்டு வரும்; நடிகர் விஜய் சேதுபதி
கொரோனாவில் இருந்து மனித இனம் நிச்சயம் மீண்டு வரும்; நடிகர் விஜய் சேதுபதி
By: Monisha Sat, 22 Aug 2020 2:16:16 PM
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் மனித இனமே பெரும் சிக்கலில் உள்ள நிலையில் இந்த பிரச்சனையிலிருந்து மனிதன் நிச்சயம் மீண்டு வருவார்கள் என்று விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் மேலும் அவர் கூறியிருப்பதாவது:-
பூமியோட குணம் என்று ஒன்று உள்ளது. பூமியில் புல்தரை இருந்தால் அதில் மனிதர்கள் நடந்து கொண்டே சென்றால் அந்த புல்தரை பாதையாக மாறி விடும். ஆனால் அதே நேரத்தில் மனிதர்கள் நடக்காமல் இருந்தால் மீண்டும் புல் முளைத்து புல்தரையாக 'ரிகவர்' ஆகிவிடும் அதேபோல் மனிதனுக்கும் பூமியைப் போல 'ரிகவர்' ஆகும் தன்மை இருக்கிறது என நம்புகிறேன். இந்த கொரோனாவில் இருந்து மனித இனம் நிச்சயம் மீண்டு வரும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் கடந்த சில நாட்களாக விஜய் சேதுபதி வெள்ளை தாடியுடன் புதிய கெட்டப்பில் இருக்கிறார். இது புதிய படத்திற்கான கெட்டப்பா? என்று கேட்டபோது 'லாக்டவுன் இருப்பதால் டை அடிக்க வேண்டாம் என்று விட்டு விட்டதாகவும், முகம் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் என்று அப்படியே விட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்
விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் மற்றும் க/பெ ரணசிங்கம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் திரையிடுவதற்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் நடித்து முடித்துள்ள லாபம் என்ற திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே