- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ் தெரிவித்த தகவல்
நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ் தெரிவித்த தகவல்
By: Nagaraj Sun, 01 Oct 2023 12:50:42 PM
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிந்தால் டைட்டில் வெற்றி பெற்று அவருக்கு கொடுக்கலாம் என்று இருந்தேன். தற்போது சீரியலில் பிஸியாக நடித்து வருவதால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல விரும்பமில்லை என்று நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை நட்சத்திரங்களாக ரச்சிதா மகாலட்சுமி – தினேஷ் தம்பதி தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், இருவருக்கும் இடையே விவாகரத்து குறித்து தினேஷ் பதில் அளித்துள்ளார்.
சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல முக்கிய சீரியல்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ரச்சிதா மகாலட்சுமி. சீரியல் மட்டுமல்லாமல் ராதாமோகன் இயக்கிய உப்புகருவாடு உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்துள்ள ரச்சிதா சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணமாக சில மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ரச்சிதா மகாலட்சுமி பிக்பாஸ் வீட்டில் தனது கணவர் குறித்து எந்த தகவலையும் பகிர்ந்துகொள்ளவில்லை.
அதே சமயம் வெளியில் இருந்து நடிகர் தினேஷ் ரச்சிதாவுக்கு பல வகைகளில் ஆதரவாக இருந்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்தும் கணவர் தினேஷை கண்டுகொள்ளாத ரச்சிதா, தனக்கு தினேஷ் கொலை மிரட்டல் விடுப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும் தினேஷ் சமானதானமாக சென்றுவிட்டதாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து ரச்சிதா விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள நிலையில், தனக்கும் ரச்சிதாவுக்கு விவாகரத்து இன்னும் ஆகவில்லை. வழக்கு மட்டும் போய்க்கொண்டிருக்கிறது என்று கூறியுள்ள நடிகர் தினேஷ், பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் ரச்சிதா கலந்துகொண்டபோது அவர் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன்.
ஒருவேளை நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிந்தால் டைட்டில் வெற்றி பெற்று அவருக்கு கொடுக்கலாம் என்று இருந்தேன். தற்போது சீரியலில் பிஸியாக நடித்து வருவதால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல விரும்பமில்லை என்று கூறியுள்ளார்.