Advertisement

குன்ஜன் சக்ஸேனா திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியாகும்!

By: Monisha Tue, 09 June 2020 6:23:32 PM

குன்ஜன் சக்ஸேனா திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியாகும்!

கொரோனா அச்சுறுத்தலால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வெளியீட்டுக்காகத் திட்டமிடப்பட்டிருந்த திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் பல தயாரிப்பாளர்கள் பொருளாதார ரீதியாக நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். எனவே இந்தச் சூழலில் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் சில படங்களை நேரடியாக தங்கள் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிட நெட்ஃபிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட தளங்கள் பேச்சுவார்த்தை நடத்தின.

இந்தப் பேச்சுவார்த்தையில் அமேசான் நிறுவனம் பல படங்களைக் கைப்பற்றியது. 'குலாபோ சிதாபோ', 'சகுந்தலா தேவி' உள்ளிட்ட படங்கள் அமேசான் ப்ரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய விமானப் படையில் விமானியாக இருந்த குன்ஜன் சக்ஸேனாவின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'குன்ஜன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

corona virus,streaming sites,the cargill girl,netflix ,கொரோனா வைரஸ்,ஸ்ட்ரீமிங் தளங்கள்,தி கார்கில் கேர்ள்,நெட்ஃபிளிக்ஸ்

குன்ஜன் சக்ஸேனா கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ளார். இந்தப் படத்தை கரண் ஜோஹரின் தர்மா ப்ரொடக்‌ஷன்ஸும், ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நெட்ஃப்ளிக்ஸ், தங்களது ட்விட்டர் பக்கத்தில் படத்தைப் பற்றிய ஒரு காணொலியைப் பகிர்ந்து, விரைவில் படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என்று கூறியுள்ளது.

சரண் சர்மா இயக்கியிருக்கும் இந்தப் படம், 1999-ம் ஆண்டு கார்கில் யுத்தத்தின்போது இந்திய ராணுவ வீரர்களைக் காப்பாற்றிய பெண் விமானி குஞ்சன் சக்ஸேனாவைப் பற்றியது. படம் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Tags :