Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்போர் குறித்த பட்டியல் வெளியாகியது!

By: Monisha Tue, 22 Sept 2020 11:20:35 AM

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்போர் குறித்த பட்டியல் வெளியாகியது!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து கொண்டிருக்கின்றன என்றாலும் தற்போது வெளிவந்துள்ள தகவல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட பட்டியல் என்றே கூறப்படுகிறது

இதுவரை வெளியான தகவலின்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகைகள் ரம்யா பாண்டியன், ஷிவானி, பாடகர் வேல்முருகன், சூப்பர் சிங்கர் புகழ் ஆஜித், ரியாலிட்டி டான்ஸ் நிகழ்ச்சி புகழ் கேப்ரில்லா, ஆங்கர் அர்ச்சனா, மற்றும் நடிகை ரேகா ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

bigg boss show,tamil,kamal haasan,actor,actress ,பிக் பாஸ் நிகழ்ச்சி,தமிழ்,கமல்ஹாசன்,நடிகர்,நடிகை

மேலும் பழம்பெரும் நடிகர் அனுமோகன் மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது வெளிவந்துள்ள பட்டியல் கிட்டத்தட்ட உறுதியான பட்டியல் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட புகழ், ரக்சன், சூர்யா தேவி, டிக்டாக் புகழ் இலக்கியா ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இல்லை என்றே தகவல்கள் வெளிவந்துள்ளன.

Tags :
|
|