Advertisement

த்ரிஷா படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது!

By: Monisha Fri, 11 Dec 2020 3:25:31 PM

த்ரிஷா படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது!

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக நாயகியாக நடித்து வருபவர் நடிகை த்ரிஷா. த்ரிஷாவுடன் நடித்த நாயகிகள் எல்லாம் தற்போது அம்மா அக்கா அண்ணி வேடங்களில் நடித்து திரையுலகில் இருந்து விலகி வரும் நிலையில் த்ரிஷா இப்போதும் நான்கைந்து படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், த்ரிஷா நடிப்பில் உருவான 'ராங்கி' என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இன்று வெளியாகவுள்ளது. இன்று மாலை 5.30 மணிக்கு 'ராங்கி' படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகவிருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

trisha,ranky,ar murugadoss,leica company,film ,த்ரிஷா,ராங்கி,ஏஆர் முருகதாஸ்,லைகா நிறுவனம்,திரைப்படம்

எம் சரவணன் இயக்கத்தில் ஏஆர் முருகதாஸ் கதையில் உருவாகிய இந்த படத்தில் த்ரிஷாவுடன் அனஸ்வரராஜன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சி சத்யா இசையில், சக்தி ஒளிப்பதிவில், சுபாரக் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இது ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் த்ரிஷா தற்போது பரமபதம் விளையாட்டு, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, சுகர், ராம், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Tags :
|
|